• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். தெல்லிப்பழையில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் !

Dez 5, 2022

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் சுமார் 2,640 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் 132 சிகரெட் பொதிகளை இலங்கைக்கு கடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தயான் இந்திக்க டி.சில்வா தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்

கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed