• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் பரவும் புதிய நோய் !ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் பலி

Dez 2, 2022

ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப் பாடசாலை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஈலிங், கிரீன் மேன் கார்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தொடக்கப் பாசடாலையின் மாணவர் ஒருவர தற்போது உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், குழந்தையின் பெயர் மற்றும் வயது வெளியிடப்படவில்லை.

பிரித்தானியாவின் சுகாதார சேவை மரணத்தை உறுதி செய்துள்ளது. பாடசாலைக்கு பொது சுகாதார ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க ஈலிங் கவுன்சிலுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.

கடந்த வாரம் சர்ரேயில் உள்ள ஒரு பாடசாலையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து உயிரிழந்தார். அத்துடன் நான்கு வயது சிறுவன் நவம்பர் 14ம் திகதி உயிரிழந்தார்.

ஸ்ட்ரெப் ஏ என்பது தொண்டை அழற்சி, அல்லது டான்சில்லிடிஸ், ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் தீவிர நிகழ்வுகளில், ஆக்கிரமிப்பு குரூப் ஏ ஸ்ட்ரெப் (iGAS) போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான தொற்று ஆகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed