பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது.
பிரான்சில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஏழு நாட்களில் சராசரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்னும் எண்ணிக்கை, நவம்பர் மாத துவக்கத்தில் நாளொன்றிற்கு 25,000க்கும் குறைவாக இருந்தது, இந்த திங்கட்கிழமை நிலவரப்படி 44,000ஐத் தாண்டிவிட்டது.
ஆனாலும், மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் இருந்ததுபோல கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை, 100,000ஐ தாண்டவோ, அல்லது, ஜனவரியில் இருந்ததுபோல 366,000ஐ தாண்டவோ இல்லை என்பதே ஒரே ஆறுதல்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பிரான்ஸ் பிரதமர் Elisabeth Borne, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும், எளிதில் தொற்றுக்கு ஆளாகுவோர் வாழும் இடங்களுக்குச் செல்லும்போதும் மாஸ்க் அணிந்துகொள்ளும்படி தான் மக்களுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.