• Do.. Apr. 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மானிப்பாயில் அபாயகரமான பொருளுடன் மூவர் கைது!

Nov. 29, 2022

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர்கள் மூவர் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

இக் கைது நடவடிக்கை (28-11-2022) மானிப்பாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தலா 30 மில்லிக்கிராம் ஹெரோயினையும் மற்றையவர் 40 மில்லிக்கிராம் ஹெரோயினையும் உடமையில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22, 23 மற்றும் 25 வயதுகளுடைய மூவரும் ஏழாலை, கூளாவடி மற்றும் தாவடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed