• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஞாயிற்றுக்கிழமை இந்த பகவானை வழிபடுவோருக்கு தலைவிதி மாறும்!

Nov. 27, 2022

நம்மில் நிறைய பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவழிபாடு செய்வதை தவிர்த்து விடுவோம். காரணம் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அசைவ சாப்பாடு இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். எது எப்படியாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள்.

அந்த நாளில் இறைவழிபாடு செய்வது குடும்பத்திற்கு ரொம்பவும் நல்லது. ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் பெரிய அளவில் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கலாம். தோல்வியை கண்டு நீங்கள் பயப்பட மாட்டீங்க. வெற்றி மேல் வெற்றியை அடைவதற்கு உண்டான வழிகள் கண்முன்னே தெரியும்.

மலை அளவு துன்பத்தைக் கூட, கடுகளவு ஆக்கிவிடும் வழிபாடு தான் இந்த ஞாயிறு வழிபாடு. அவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை நம்முடைய வீட்டில் எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய வழிபாட்டு முறையை தான் சுருக்கமாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.ஞாயிறு மாலை ராகு கால நேரம் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. இந்த ராகு கால சமயத்தில் உங்களுடைய வீட்டில் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு சிறிய பித்தளை தாம்பல தட்டில் ஒரு கைப்பிடி கோதுமையை போட்டு பரப்பி, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும்.

உங்களுக்கு வாழ்வில் பிரச்சனை என்ற ஏதோ ஒரு விஷயம் இருக்கும் அல்லவா. அந்த ஒரு பிரச்சனைக்காக இந்த தீபத்தை ஏற்றி அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து குறைந்தது 15 நிமிடமாவது சூரிய பகவானையும் எம்பெருமானையும் மனதார நினைத்து, குலதெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டுதல் வைக்க வேண்டும். (கோதுமை விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண காமாட்சியம்மன் விளக்கு ஏற்றியும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

) ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய இந்த வழிபாடு நாய் படாத பாடுபடும் உங்கள் வாழ்க்கையை நாசுக்காக மாற்றி விடும் என்றால் பாருங்கள். சில பேர் வாழ்க்கையில் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னடா வாழ்க்கை இது. பிறந்த நேரமோ என்னமோ தெரியவில்லை. நாய்ப்படாத பாடுபடுகின்றேன் என்று.அப்படிப்பட்டவர்கள் எல்லோருக்கும் விடிவு காலம் தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறை தான் இது. விடாமல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். திங்கள்கிழமை அந்த விளக்கை எடுத்து சுத்தம் செய்துவிட்டு தானியத்தை பசு மாட்டிற்கோ அல்லது காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டு விடலாம்.

இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு உங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். நல்ல வேலை கிடைக்கவில்லை. கடன் பிரச்சனை உள்ளது. வீட்டில் சுபகாரிய தடை உள்ளது. ஜாதக கட்டத்தில் நேரம் சரியில்லை. பெரிய பெரிய பரிகாரங்கள் செய்ய சொன்னார்கள். ஆனால் அதற்கான நேரமும் இல்லை.

பணமும் இல்லை என்பவர்கள் இந்த வழிபாடு செய்யாமல். நவகிரகங்களால் இருக்கக்கூடிய கோளாறுகளை சரி செய்யவும் இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு வழிவகுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed