• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை!

Nov. 24, 2022

யாழ்நகர், மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள உணவகங்கள், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள உணவகங்கள் யாழ்மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

அத்தோடு சுகாதார சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது.

திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed