பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000 மதுசார போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பாக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். கார் ஒன்றில் மறைத்து வைத்த நிலையில் இந்த மதுபானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
காரில் காணப்பட்ட அதிக நிறையும் அதிக புகையை வெளியேற்றிய நிலையில் பயணித்தமையினால் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, அந்த காரை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சரியாக 2,976 மதுபான போத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் உள்ள சுப்பர் மார்க்கெட்கள் மற்றும் கடைகளில் அதிக விலையில் விற்பனை செய்வதற்காக இந்த மதுபான போத்தல்களை கொண்டு வந்துள்ளனர். எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் லக்சம்பேர்க்கில் இருந்து இந்த மதுபான போத்தல்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டு இலங்கையர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தமிழ் குழுவொன்றினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில் இவர்கள் இந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த இலங்கையர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.