• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

Nov 10, 2022

பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள், மீளக்கோரப்படவுள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அரிசியில் aflatoxins எனப்படும் உணவில் பரவும் தீவிரமான நச்சுப் பொருள் பரவியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருள் ஆசியா போன்ற சூடான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் உருவாகின்றன.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டு ப்றாம்பிறி நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் அரிசிகளில் இந்த நச்சுப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை பிரான்ஸில் எல்லா இடங்களிலும் இந்த அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவை 3263850564413 என்ற உலகளாவிய வர்த்தக பொருள் எண்ணைக் கொண்டுள்ளன.

பிரான்ஸ் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை! | Emergency Warning To The Public Of France

அவற்றை அடையாளம் காண ஒரு கிலோ பொதிகளை பார்வையிடுமாறும் அதன் குறைந்தபட்ச காலாவதி திகதி 2023ஆம் ஜனவரி மாதம் 11ஆம் திகதி பதிவிடப்பட்டிருக்கும் என அரசாங்க தளமான Rappel Consoவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்லாடாக்சினின் பரவல் கொண்ட அரிசியை உட்கொண்டால் உடனடி உடல்நல ஆபத்துக்கள் ஏற்படாது. எப்படியிருப்பினும், இந்த அப்லாடாக்சினின் மிக அதிகமான மற்றும் மீண்டும் மீண்டும் உட்கொள்வது நாட்பட்ட விஷத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் எடை இழப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவைகள் ஏற்படலாம் என ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் தகவலுக்கமைய, தெரியவந்துள்ளது.அதனால் இந்த அரிசியை வைத்திருக்கும் மக்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed