பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த அரிதான நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்ட் 25) நண்பகல் வேளையில் இடம்பெற உள்ளதாக வான இயக்கவியல் தொடர்பான நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சூரிய கிரகணம் இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரம் மட்டும் நீடிக்கும் என அறிவக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் எப்பாகத்தில் இருந்தும் இதனை பார்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11.15 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சூரிய கிரகணம் பகல் 1 மணிவரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதியே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் ஜுன் மாதம் இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தோன்வில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கிரகணம் நாடு முழுவதும் காணப்பட்டாலும் அதுஸ்த்றாஸ்புரில் (Strasbour) தான் மிக அதிகமாக காட்சியளிக்கும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்டின் வடக்குப் பகுதியில், இந்த நிகழ்வு சற்று குறைவாகவே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், வடகிழக்கு ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதியிலும் இந்த நிகழ்வைக் காணலாம். கிரகணத்தை அனைவரும் ஆய்வு செய்ய முடிந்தால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சூரியனை நேரடியாக பார்க்காமல் சீடி அல்லது எக்ட்ரே போன்றவைகளின் உதவியுடன் பார்க்குமாறு பிரான்ஸ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.