சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அழைப்பு விடுக்கத் துவங்கியுள்ளனர்.
டிசினோ மாகாண தொற்று நோயியல் துறை நிபுணரான ஆண்ட்ரியாஸ் செர்னி(Andreas Cerny), மாஸ்க் அணிதல் நல்ல பலனுள்ளது என நிரூபணம் ஆகியுள்ளதாகவும், மருத்துவமனைகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் குறைவான அளவிலேயே உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், அது இதற்கு முன் உருவான மரபணு மாற்ற வைரஸ்களை விட அதிக அளவில் தொற்றக்கூடியது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த அரசியல்வாதிகள் தயங்குகிறார்கள். சுவிஸ் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரியாஸ் செர்னி(Andreas Cerny), சிலரை பாதுகாப்பதற்காக, அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.