• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீர்வேலி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

Okt. 18, 2022

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் இளைஞரின் இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed