• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

4 பேரைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதச்செலவு எவ்வளவு வெளியான தகவல்

Okt. 18, 2022

இலங்கையில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாத செலவிற்காக 53,840 ரூபா தேவைப்படுவதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த தொகை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

மாதாந்தம் வெளியிடப்படும் வறுமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தனி நபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்காக 13460 ரூபா தேவைப்படுவதாகவும், இது ஜுலை மாதம் 13138 ரூபாவாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு கூடுதலாக செலவிட நேரிட்டுள்ளது எனவும், மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த தொகை செலவிட நேரிட்டுள்ளது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் தனி நபர் ஒருவருக்கு மாதாந்தச் செலவாக 14517 ரூபாவும், மொனராகலை மாவட்டத்தில் தனி நபர் ஒருவரின் மாதாந்த செலவாக 12870 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed