• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

12 கோடியில் பிரதமர் மோடியின் புதிய கார்!

Dez. 28, 2021

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை பலரும் பயணிப்பதற்காக பிரத்யேகமாக பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் வடிவமைக்கப்படுகின்றன.

முன்னதாக பிரதமர் மோடி டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸ் காரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மெர்சிடிஸ் நிறுவனத்தின் மேபெக் எஸ்650 மாடல் காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

இந்த வகை கார் ஏகே47 துப்பாக்கி குண்டுகளையும் துளைக்காமல் தடுக்கும் வலிமை கொண்டது. மேலும் விபத்து ஏற்பட்டால் பெட்ரோல் டேங்க் தானாக மூடிக்கொள்ளும் வசதி, வாயு தாக்குதல் ஏற்பட்டால் செயற்கை சுவாச கருவி என பல வசதிகளுடன் கூடிய இந்த காரின் விலை ரூ.12 கோடியாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed