சீனமொழியில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே நிறுத்திவிட்டது.
கூகுளுக்கு ஏற்படும் சறுக்கல்கள் வழக்கமானதுதான். ஆனால் சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஒருபக்கம் கூகுள் சேவைகளை ஊடுருவு (hack) செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மிகச் சிறப்பான சேவையை வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சீனத்தில் கூகுள் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், 2017ஆம் ஆண்டு சீனத்தில் தொடங்கப்பட்ட மொழிபெயர்ப்பு சேவையை குறைவான பயன்பாடுகளால் நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
கூகுளை விடவும் உள்நாட்டு செயலிகள் சீன மொழியை மொழிபெயர்ப்பதில் அதிக பயன்பாட்டில் இருப்பதால் கூகுள் தனது சேவையை இடைநிறுத்தி கொள்கிறது.