சுவிட்சர்லாந்தில் ஓய்வு பெற்றவர்களில் ஏழு பேரில் ஒருவர் வறுமையில் தவிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்களும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களும்தான் அதிக அளவில் வறுமையில் வாழ்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் வாழும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவர் அன்றாட வாழ்வின் தேவைகளை சந்திக்க இயலாமல் தவிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
சுவிஸ் மக்களில், ஓய்வு பெற்ற சுமார் 46,000 பேர் ஏற்கனவே வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். விரைவில், 295,000 பேர் அவர்களுடன் இணைந்துகொள்ளும் அபாயத்தில் இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, மாதம் ஒன்றிற்கு 2,279 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே வருவாய் ஈட்டுபவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வதாக பொருள் ஆகும்.
சுவிட்சர்லாந்தில், ஐந்தில் ஒரு முதியவர் வறுமையில் வாழும் அபாயத்திற்குள்ளாக இருக்கிறார் அல்லது ஏற்கனவே வறுமையில் வாழ்கிறார் என்கிறார் முதியோர் உரிமை அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Alexander Widmer என்பவர்.
பணக்கார நாடாகிய சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துகொண்டு மற்றவர்களிடம் உதவி கோருவதா? என்னும் எண்ணத்தால் மற்றவர்களிடம் உதவி கோர வெட்கப்பட்டுக்கொண்டு ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்களாம்.
முதிய பெண்மணிகள், அதுவும் குறிப்பாக, புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்களும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களும்தான் அதிக அளவில் வறுமையில் வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.