உலகின் பணக்கார நாடாகிய சுவிட்சர்லாந்திலும் வறுமையில் வாடும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் தோரயமாக 735,000 பேர் வறுமையில் வாழ்கிறார்கள்.
உலக நாடுகள் பலவற்றில் வாழும் மக்கள், சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே வாழ்வதாக நினைக்கிறார்கள்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் கொண்ட மக்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணிக்கை சுவிஸ் மக்கள்தொகையில் வெறும் 15 சதவிகிதம்தான்.
சுவிட்சர்லாந்தின் 2019ஆம் ஆண்டுக்கான பெடரல் புள்ளிவிவர அலுவலகத் தகவல்களின்படி, சுவிஸ் மக்கள்தொகையில் 57.6 சதவிகிதத்தினர் நடுத்தர வர்க்கத்தினர்தான்.
ஆம், சுவிட்சர்லாந்திலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தின் 2021ஆம் ஆண்டுக்கான பெடரல் புள்ளிவிவர அலுவலகத் தகவல்களின்படி, சுவிஸ் மக்கள்தொகையில் 8.7 சதவிகிதத்தினர், தோரயமாக 735,000 பேர் வறுமையில் வாழ்கிறார்கள்!
சுவிட்சர்லாந்தில் ஏராளமானோர் வறுமையில் வாடுகிறார்கள் என்பது, கோவிட் காலகட்டத்தில் அப்பட்டமாக தெரியவந்தது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஆயிரக்கணக்கானோர் ஜெனீவாவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
யார் சுவிட்சர்லாந்தில் வறுமையில் வாழ்கிறார்கள்?
ஒரு பெற்றோர் மட்டும் கொண்ட குடும்பங்கள், அடிப்படைக் கல்விக்கு மேல் கற்காதவர்கள், பிள்ளைகளில்லாத தனிமையில் வாழும் 65 வயதுக்குக் குறைந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்தான் சுவிட்சலாந்தில் வறுமையில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.