வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அதன்போது, தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாளைய தினம் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது .