யாழ்.வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருந்தோர் அவற்றை செலுத்திவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பணம் 3 ஆயிரம் ரூபாய்
மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப்பணம் 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்திற்கு மேலதிகமாக செலுத்தவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ் சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று பெரும் தொகை நிலுவையி;ல் உள்ளநிலையில் மின்துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் அழுதங்கள் காரணமாக மீண்டும் இணைப்பு வழகப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.