இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகவும் முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதன் படி உலகின் பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
தற்போது ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், பூஸ்டர் தடுப்பூசி, அதாவது மூன்றாவது தடுப்பூசி அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெலகாவிவை சேர்ந்த நபர் நபர்(பெயர் தெரிவிக்கப்படவில்லை) உயிர் பயம் காரணமாக, கொரோனாவிடம் இருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்பதற்காக, தற்போது வரை 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
அதன் பின் 9-வது முறையாக தடுப்பூசி போடும் போது, அவர் போலி ஆவணங்களை வைத்து தடுப்பூசி போட முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த பொலிசார், அவரை பிடித்து விசாரித்த போது, தான் 8 முறை தடுப்பூசி போட்டும் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.