வலுவான நுகர்வோர் பாதுகாப்புகளை உருவாக்கும் வகையில் கனடாவில் புதிய வங்கி விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. குறித்த விதிகளால் நீண்ட கால பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்றே சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கனடாவின் வங்கிச் சட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதில் புகார்களைத் தீர்ப்பதற்கான குறுகிய காத்திருப்பு நேரங்கள், குறைந்த வங்கி இருப்புகளைப் பற்றிய மின்னணு விழிப்பூட்டல்கள் மற்றும் உங்கள் கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் அதற்கு நீங்கள் எவ்வளவு பொறுப்பாவீர்கள் என்பதற்கான வரம்புகள் போன்றவை அடங்கும்.கடந்த பத்தாண்டுகளாக வங்கி விதிகளில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் நிபுணர்கள் தரப்பு நகர்வுகளை முன்னெடுத்து வந்துள்ளது. இதனையடுத்து ஜூன் 30ம் திகதி புதிய விதிகள் பெடரல் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களில் சில கனடாவின் 30 மில்லியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் புகார்களை தீர்க்க 90 நாட்களுக்குப் பதிலாக இனி 56 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், வங்கிகள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளின் சுமையை $50 ஆகக் கட்டுப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் மிகைப்பற்று அல்லது கடன் வரம்புக்கு மேல் சென்றால், கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்