கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக, குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார்.
பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தாயும் கைக்குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.