• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகின் மிகப்பெரிய மலைப் பாம்பை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Jun 26, 2022

உலகின் மிகப்பெரிய மலைப் பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வனவிலங்கு உயிரியலாளர்கள் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கின்றார்கள். 

அதன்படி ஆண் மலைப்பாம்புகளில்  ரேடியோ டிரான்ஸ் மீட்டர்களை பொருத்துவதன் மூலமாக அதிக அளவில் முட்டையிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

அதனை செயல்படுத்தும் விதமாக புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் வசித்து வந்த பெண் மலைப்பாம்பு ஒன்றை பிடிக்க நிபுணர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 20 நிமிட போராட்டத்திற்கு பின் அந்த மலைப்பாம்பு சிக்கியுள்ளது.

இதனையடுத்து ஆய்வு கூட்டத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் 18 அடி நீளமும், 98 கிலோ எடையும் கொண்டதாகும். அதன் வயிற்றில் 122 முட்டைகள் இருப்பதாகவும் ப்ளோரிடாவின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

மேலும் இனப்பெருக்க காலத்தில் அதிக அளவிலான முட்டைகளை உற்பத்தி செய்த மலைப்பாம்பு என்ற சாதனையை இந்த  பாம்பு பிடித்திருக்கிறது என்றும்  இது தொடர்பாக தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்தது எனவும் ப்ளோரிடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பர்மிய மலைப்பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றாகும். கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய பர்மிய  மலைப்பாம்பின் புகைப்படங்களை தெற்கு புளோரிடா வன பாதுகாப்பு அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed