• So.. Apr. 6th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் துாக்கில் தொங்கி மரணம்

Juni 24, 2022

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிவலோகேஸ்வரன் மதுரகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!

மேலும் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed