• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதற்றம்.

Juni 18, 2022

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டமையால் இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் காவற்துறையினர் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர்.

நிலைமை சுமூகமானதை தொடர்ந்து நள்ளிரவை அண்மித்தும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதனை அடுத்து இன்றைய தினம் அதிகாலை முதல் பலர் நீண்ட வரிசையில் காத்து இருந்து எரிபொருளை பெற்று சென்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பலர் காத்து இருக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed