• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குரங்கு அம்மையால் பதிவான முதல் பலி.

Mai 31, 2022

நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ கூறுகையில்,

நாட்டில் 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோவின் நிலை மோசமடைந்து உள்ளது. காங்கோவில் வசிப்போர் வன பகுதிக்கு சென்று இறந்த குரங்கு, வவ்வால் மற்றும் எலிகளின் உடல்களை எடுத்து வந்து உணவாக சாப்பிட்டதில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளதாக அலங்கோ கூறியுள்ளார்.

அத்துடன் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று நைஜீரியாவில் சந்தேகத்திற்குரிய வகையிலான 66 பேரில் 21 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. அவர்களில் ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்து உள்ள நிலையில், 40 வயது கொண்ட அவருக்கு இணை நோய்களும் இருந்தன என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

அந்நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து குரங்கு அம்மை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனினும், 36 மாகாணங்களில் 22 மாகாணங்களில் 247 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed