நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதேவேளை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு எரிபொருள் தட்டுப்பாடு மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு போன்றவற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தின்படி மக்கள் மேலும் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.