• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்

Mai 19, 2022

யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கொள்கலனை திறந்து காண்பித்தால் மாத்திரமே தாங்கள் அவ்விடத்தைவிட்டு செல்வோம் என கூறி விடாப்பிடியாக நின்றனர்.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலைய கொள்கலன்களை திறந்து காண்பித்த பின்னர் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed