பிரித்தானியாவில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 900,000 பவுண்களை (இலங்கை மதிப்பில் சுமார் 40 கோடி ரூபா) எடுத்தமைக்காக முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
30 வயதான ஹம்சா இசாக், 2016 மற்றும் 2018 க்கு இடையில் ஹெச்எஸ்பிசியின் லீசெஸ்டர் கிளையில் பணிபுரியும் போது கணக்கு விபரங்களை மாற்றியுள்ளார்.
இசாக்கின் உதவியுடனும் தந்திர அறிவுடனும் ஏனைய கணக்குகளில் மொத்தம் 896,645.05 பவுண்கள் (இலங்கை மதிப்பில் 39கோடியே 55 லட்சத்து 96 ஆயிரத்து 254 ரூபா) வைப்பில் இடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி மற்றும் கணினி தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்கு, 5 ஆண்டுகளும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.