ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபடு பாதிப்பால் முதன்முறையாக மரணம் நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபட்டால் முதன்முறையாக மரணம் ஏற்பட்டுள்ளதை மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) உறுதிப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவிட்டது. ஒமிக்ரான், டெல்டா வைரஸைவிட வேகமாக பரவினாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக நாட்டின் சுகாதார அமைச்சர் Karl Lauterbach தெரிவித்துள்ளார்.
மற்ற ஐரோப்பிய நாடுகளை போல ஜேர்மனியில் தற்போது வரை ஒமிக்ரானின் பெரியளவிலான தொற்று பரவல் ஏற்படவில்லை.