• So.. Apr. 6th, 2025 1:39:40 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.அராலி விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம்

Apr. 29, 2022

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு இடம்பெற்றுள்ளது.

பட்டா ரக வாகனம் ஒன்று காரைநகரில் இருந்து யாழ் நோக்கி அராலி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்தது.

இதன்போது குறித்த வாகனத்திற்கு பின்னால் முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.

வீதிக்கு குறுக்கே மாடு சென்றதால் பட்டா ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானர்.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed