• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கணிதத்தில் புத்திசாலிகள் ஆண்களா? பெண்களா? – யுனெஸ்கோ அறிக்கை

Apr 29, 2022

கணிதத்தில் பெண்கள் புத்திசாலிகளாக மாறி வருவதாக யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் கல்வி கற்கும் திறன் குறித்து யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ இந்த ஆய்வறிக்கையை தயாரிக்கிறது.

இந்த அறிக்கையில், முந்தைய காலக்கட்டத்தில், கணிதத்தில் ஆண், பெண் இரு பாலரிடத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருந்ததாகவும், மாணவிகளை விட மாணவர்களே கணக்குப் போடுவதில் கில்லாடிகளாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அந்த வேறுபாடு மறைந்துவிட்டதகாவும். பெண்களின் முன்னேற்றம் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. இந்த பாலின வேறுபாடு ஏழை நாடுகளிலும் கூட மறைந்திருப்பதகாவும், ஒரு சில நாடுகளில் இந்த பாலின வேறுபாடு அப்படியே எதிர்மறையாக, மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கல்வியில் பாலின சமத்துவமின்மை விலக வேண்டும் என்றும், பெண்கள் தங்களது திறமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இன்னும் அதிகமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed