• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பூஜையின் சிறப்புகள்.

Apr 28, 2022

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.

எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed