• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருநெல்வேலியில் வீடுடைத்து நகைகள் திருட்டு!

Apr 20, 2022

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின்  விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத   நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுமார் 50  பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed