வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பொங்கல் விழா நாளை செவ்வாய்க்கிழமை(12.4.2022) சிறப்புற இடம்பெறவுள்ளது.
அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி, உஷக் காலப் பூசை என்பன இடம்பெற்றுக் காலை-06 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், வழுந்துப் பானை வைத்தல் நிகழ்வும், தொடர்ந்து காலை-08 மணிக்கு காலைப் பூசை, கூட்டு வழிபாடும், முற்பகல்-10 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும், முற்பகல்-11 மணிக்கு உச்சிக்காலப் பூசையும், முற்பகல்-11.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும், அம்பாள் உள்வீதி உலாவும் நடைபெறும்.
பிற்பகல்-4.30 மணிக்கு சாயரட்சைப் பூசை இடம்பெற்றுப் பிற்பகல்-04.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் உள்வீதி, வெளி வீதி உலாவும், இரவு-07 மணிக்கு அர்த்தசாமப் பூசையும் இடம்பெறும்.
இதேவேளை, இவ் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவை முன்னிட்டுப் பொங்கிப் படைக்கும் அடியார்கள் ஆலய இராஜகோபுரத்தின் முன்பாக அமைக்கப்பெற்றிருக்கும் தற்காலிக மண்டபத்தில் படையல்களைப் படைத்து நேர்த்தியைப் பூர்த்தி செய்யலாம் என மேற்படி ஆலய நிர்வாகசபை அறிவித்துள்ளது.