யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.
எனினும் இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமணடலவியல் தினைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.