நடுக்கடலில் படகு எந்திர கோளாறு ஏற்பட்டு நின்றதால், உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர்.
ஆப்பிரிக்கா நாடுகளான அல்ஜீரியா, லிபியா போன்ற நாடுகளில் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. வறுமையும் வாட்டி வதைக்கிறது.
இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி ஜரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். இதற்காக அவர்கள் திருட்டுத்தனமாக கடல் வழியாக படகுகளில் செல்கின்றனர். லிபியாவில் இருந்து ஒரு படகில் 100 பேர் சென்று லிபியாவில் இருந்து சுமார் 100 பேர் ஒரு படகில் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்தனர்.
நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த படகு நடுக்கடலில் நின்றது. 4 நாட்கள் கடலில் தவித்த அதில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர்.
அப்போது அந்த படகு அப்படியே கவிழ்ந்தது. இதனால் அதில் சிக்கி கொண்டவர்கள் உயிருக்காக போராடினார்கள்.
இதுபற்றி அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் மீட்டனர். 90 பேர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.