இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 600 ரூபாவினாலும், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 260 ரூபாவினாலும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விலை அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (19) பிற்பகல் வெளியிடப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு கேள்விக்கு தேவையான பால் மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடன் கடிதங்களை வௌியிடுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக தேவையான பால் மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.