ரஷ்யா மீதான தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
திங்கட்கிழமையன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, எதிரி நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகள், தன் நாட்டுடனான நட்புக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எதிரி நாடுகள் பட்டியலில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து முதலான நாடுகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டன.
எதற்காக இந்த நாடுகள் ரஷ்யாவின் எதிரி நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடைகள் விதித்ததற்கு, பதில் நடவடிக்கையாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தனால், ரஷ்ய நிறுவனங்களுடனான வர்த்தக தொடர்பு பாதிக்கப்படலாம் என கருதப்பட்டாலும், ஏற்கனவே தடைகள் காரணமாக மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறத் துவங்கிவிட்ட நிலையில், அந்நிறுவனங்களுக்கு பெருமளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.