• Mo.. Apr. 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சித்திரை கிருத்திகை மந்திரம்

Apr. 28, 2025

உள்ளம் உருகி நம்பிக்கையோடு முருகனை வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டும்தான் இருக்கும். இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து சித்திரை மாதத்தின் கிருத்திகை திதி வந்திருக்கிறது.

முருகப்பெருமான் உருவமாக இந்த பூலோகத்தில் அவதரித்த தினம் சித்திரை கிருத்திகை என்று நம்பப்படுகிறது.

தை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த, மகத்துவம் நிறைந்த கிருத்திகை என்று நம்பப்படுகிறதோ, அதேபோலத்தான் சித்திரை கிருத்திகையிலும் முருகனை வழிபாடு செய்ய தவறவிடக்கூடாது.

குடும்ப கஷ்டம் தீர, நோய்நொடி தீர, சீக்கிரம் திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, நல்ல வேலை கிடைக்க, வாழ்வில் மன நிம்மதியை அடைய, இப்படி பல விதமான நன்மைகளைக்காகவும் இந்த கிருத்திகை நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யலாம்.

அந்த வகையில் நம்பிக்கையோடு இந்த சித்திரை கிருத்திகை நாளில் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தையும், இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இது ஒரு அரிய மந்திரம் பெரும்பாலும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மந்திரத்தை படிக்க துவங்கி விட்டால், வாழ்க்கையில் நீங்கள் வளமாக வாழலாம்.ஆன்மிக புத்தகங்கள் சித்திரை கிருத்திகை மந்திரம் நாளைய தினம் 29-04-2025 சித்திரை கிருத்திகை அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். “அரோகரா” முருகா, என்னுடைய இன்றைய கிருத்திகை தின வழிபாட்டில் எந்த தடையும் வந்து விடக்கூடாது.

நீதான் பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்று முதலில் நீராடி விட்டு வந்து, நெற்றியில் திருநீறு பூசி “சரவணபவ” மந்திரத்தை சொல்லி விடுங்கள்.

பிறகு உங்களுடைய வீட்டில் மயில் இறகு இருந்தால் ஒரு மயிலிறகை கையில் வைத்துக் கொள்ளுங்கள். மயிலிறகு இல்லை என்றால் நாளை முருகன் கோவிலுக்கு சென்று வெறும் 10 ரூபாய் கொடுத்து ஒரு மயிலிறகை வாங்கி வந்து, முருகர் கையில் வீட்டில் கொடுத்து விடுங்கள்.

உங்களுக்கு அது பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். கையில் மயிலிறகை வைத்துக் கொண்டு அதிசக்தி வாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை முடிந்தால், இன்று அதிகாலை வேலையிலேயே 1008 முறை சொல்லலாம். உங்களுடைய இந்த விசுவாவசு வருடம் முடியும் வரை உங்கள் வாழ்க்கையில் தோல்வி என்பதே வராது.

ஒரு வருடத்திற்கு வெற்றியை கொடுக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. தோல்வி உங்களை நெருங்க கூட முடியாது. வெற்றி மேல் வெற்றி வாகை சூட இந்த ஒரு வரி மந்திரம் போதும்.

1008 முறை உச்சரிக்க முடியாது, எங்களுக்கு நேரமில்லை என்பவர்கள் 108 முறை உச்சரிக்கலாம். முருகன் சன்னிதானத்தில் அமர்ந்து பத்து நிமிடம், பதினைந்து நிமிடம் கண்களை மூடி இந்த மந்திரத்தை சொல்ல, இந்த மந்திரம் உங்களுக்கு சீத்திரம் சித்தி ஆகிவிடும். பிறகு இந்த மந்திரத்தை சொல்லும்போதெல்லாம் வெற்றி உங்கள் அருகில் நெருங்கி நெருங்கி வர துவங்கும்.

பிறகு பணம் காசு சொத்து சுகம் எல்லாம் உங்களை நிரம்ப துவங்கிவிடும். சரி முருகனின் சக்தி வாய்ந்த அந்த மந்திரம் என்ன. வெற்றி தரும் முருகன் மந்திரம் ஓம் சரவணபவ இம் வம் ஆ சரவணபவ மந்திரத்திற்கு ஈடு இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது.

அதோடு இந்த மந்திரத்தையும் சேர்த்து உச்சரிக்கும் போது, அபரிவிதமான சில அற்புதமான பலன்களை நிச்சயம் உங்களால் உணர முடியும். புதுசாக நாம் எதுவும் சொல்லவில்லை. அந்த காலத்தில் சித்தர்களும் ஞானிகளும் சொல்லி வைத்திருந்த மறைக்கப்பட்டு இருந்த ஒரு சில மந்திரங்கள் தான் இவை.

இன்று சித்திரை கிருத்திகை தினத்தில் இந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed