2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.
சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள்
அத்தோடு, அதே இரு சகோரர்தகள் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.
சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயர்தரத்தில் சாதணை படைத்துள்ளனர்.
யாழில் அதிகரிக்கும் சிக்கன்குனியா.
இதேவேளை, குறித்த மாணவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ் மாணவன் படைத்த சாதனை
2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை, இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனான வியாகர்ணன் பிரவீன் என்ற மாணவரே இவ்வாறு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதில் இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனான வியாகர்ணன் பிரவீன் மாவட்ட ரீதியாக முதலிடத்தை பெற்றுள்ளார்.
அத்தோடு, அகில இலங்கை ரீதியாக 97வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏ சித்தியையும், தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானத்தில் ஏ சித்தியையும், இயந்திரவியல் தொழில்நுட்பத்தில் பி சித்தியையும் பெற்று சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.