கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait பகுதியில் புதிய மைக்ரோ கண்டம் (microcontinent) கண்டறியப்பட்டுள்ளது.
சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில், கடலின் அடியில் புதைந்து கிடக்கும் “Proto Microcontinent” எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி தற்போது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீட்டர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய continental crust கொண்டதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.