• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Apr. 19, 2025

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு இரண்டாயிரம் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார, அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் குழுவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed