• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணம்

Apr. 19, 2025

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 1 பிள்ளையின் தந்தையான சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச்சேர்ந்த 27 முஹமட் முஸ்தபா முஹமட் சியாம் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் மற்றுமொரு நபருடன் வேலையின் நிமித்தம் வயலுக்குச்சென்ற நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன் போது உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டவர் காயமடைந்த நிலையில், சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed