• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாழ்வில் அற்புதங்கள் நிகழ

Apr. 18, 2025

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு நன்மைகள் நடந்து விடாதா? நம் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடாதா? என்று யோசித்து இருப்போம்.

வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்

கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களும் கண்டிப்பான முறையில் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக பல விதமான வழிபாடுகளையும் பரிகாரங்களும் செய்வார்கள்.

அந்த வகையில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி எந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றமும் அற்புதமும் நிகழும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கிளிநொச்சியில் துயரம்`! தந்தையின் டிப்பர் சில்லில் அகப்பட்டு குழந்தை உயிரிழப்பு

ஒவ்வொரு மாதத்திலும் முருகப்பெருமானுக்கு உகந்த திதியான சஷ்டி திதி என்பது வரும். சஷ்டி திதி வரக்கூடிய நாளில் முருகப்பெருமானை நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் பலவிதமான நன்மைகள் உண்டாகும்.

நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அப்படிப்பட்ட சஷ்டி திதி அன்று இந்த முறையில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்குரிய அற்புதத்தை முருகப்பெருமான் நிகழ்த்துவார்.

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்

சஷ்டி திதி என்பது ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மதியம் 2:21 மணிக்கு ஆரம்பித்து சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மதியம் 2:54 மணி வரை இருக்கிறது. சூரிய உதயத்தின் பொழுது எந்த திதி இருக்கிறதோ அந்த திதி அன்று நாள் முழுவதும் இருப்பதாக அர்த்தம்.

அந்த வகையில் சனிக்கிழமை சஷ்டி திதியாக வருவது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் நாம் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரே ஒரு தீபம் இருந்தால் போதும். வீட்டு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு ஒரு தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் செவ்வரளி மலர்களை பரப்பி அந்த மலருக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு நாமும் கிழக்கு பார்த்துவாறு அமர்ந்து கொண்டு அந்த தீபச்சுடரொளியை பார்த்தவாறு முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை ஒருமுறை படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும் பொழுது நம்முடைய கையில் துளசி இலைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

துளசி இலைகள் என்பது பெருமாளின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

அன்றைய தினம் சனிக்கிழமை என்பதாலும் சஷ்டி திதி என்பதாலும் நாம் இவர்கள் இருவரையும் ஒரு சேர வழிபாடு செய்யும் பொழுது இவர்கள் இருவரின் அருளாலும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்கள் நீங்கும். கந்த சஷ்டி கவசத்தை படித்து முடித்த பிறகு இந்த துளசி இலைகளை வீட்டு பூஜை அறையிலோ அல்லது பீரோவிலோ வைத்துவிடலாம்.

அது காய்ந்த பிறகு அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழக்கூடிய ஏப்ரல் 19ஆம் தேதி முருகப்பெருமானோடு சேர்த்து பெருமாளின் அருளையும் பெறுவதற்கு இந்த ஒரு எளிமையான வழிபாடு உதவும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed