நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டால், நம்முடைய வாழ்க்கையில் எளிதில் வெற்றிக்கான, நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன பரிகாரங்கள் கூட, பெரிய அளவில் பலனை நமக்கு கொடுத்து விடும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இந்த வெற்றிலை பரிகாரத்தை எவர் வீட்டில் எல்லாம் செய்கின்றீர்களோ, அவர்களுடைய வீட்டில் வேகமாக வெற்றி வீட்டிற்குள் வர துவங்கும். தோல்வி என்ற வார்த்தை வீட்டிற்குள் தங்காது.
யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!
நிலை வாசலில் ஏதேனும் துர் சக்திகளின் ஆதிக்கம் இருந்து, வீட்டிற்குள் வரும் நல்லதை, அந்த துர் சக்திகள் தடுத்து நிறுத்தும் சூழ்நிலை இருந்தால், அதை தகர்க்கும் பரிகாரமாகவும் இந்த பரிகாரம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முழு நம்பிக்கையோடு இரண்டு வெற்றிலை மேலே இந்த ஒரு பொருளை வைத்து, நிலை வாசல் படியில் வைத்து விடுங்கள்.
முதலாம் ஆண்டு நினைவு!இராஜதுரை பொன்னம்பலம் (சுவிஸ்,18.04.2025)
ஒரு நாள் இரவில் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். இன்று வெள்ளிக்கிழமை. வெற்றிலையின் மேலே வைக்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன. அதை எப்படி, எந்த வார்த்தையை சொல்லி நிலை வாசலில் வைக்க வேண்டும்,
சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!
நீங்கள் நிலை வாசலில் வெற்றிலையின் மேலே வைக்க வேண்டிய பொருள் டைமண்ட் கற்கண்டு. இது மகாலட்சுமிக்கு சொந்தமானது. சுக்கிரனுக்கு சொந்தமானது.
இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெற்றிலையின் மேலே இரண்டு கற்கண்டுகளை வைத்து, மனமுருக மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது அனைத்தும் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இன்றைய இராசிபலன்கள் (18.04.2025)
வாசனையான தீப தூபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவடைந்த உடன் சிறிது நேரம், வெற்றிலையும் டைமண்ட் கற்கண்டும் பூஜை அறையிலேயே இருக்கட்டும்.
யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, மகாலட்சுமியின் வருகை என்றென்றும் வீட்டில் இருக்க வேண்டும் பிரார்த்தனை செய்து இந்த மந்திரத்தை படித்து நிலை வாசலில் வெற்றிலையையும் கற்கண்டையும் வைக்க வேண்டும். மகாலட்சுமி வருகை தரும்
மந்திரம் ஸ்ரீ மகாலட்சுமி வேத ரூபியே, ஸ்ரீ நாத ரூபியே, மங்கள ரூபியே, குபேர லட்சுமியே, தனதா தேவியே நமோஸ்துதே நமோஸ்துதே ! –
– என்ற இந்த மந்திரத்தை ஒரு முறை படித்து பூஜை அறையில் இருக்கும் அந்த வெற்றிலையையும் கற்கண்டையும் அப்படியே கொண்டு போய் உங்கள் நிலை வாசல் படியில் வைக்க வேண்டும். நிலைவாசல் சட்டத்தில் மஞ்சள் தடவி கோலம் போட்டு இருப்பீர்கள் அல்லவா. அழகாக இருக்கும் அந்த நிலை வாசல் சட்டத்தின் மேல் இந்த வெற்றிலையை வைத்து விடுங்கள். வாசல்கால் என்று சொல்லப்படும் அந்த மர சட்டத்தின் மேல் தான் இந்த வெற்றிலையை வைக்க வேண்டும் தரையில் வைக்க கூடாது. இரண்டு வெற்றிலை, இரண்டு டைமண்ட் கற்கண்டுகள். இரண்டு வெற்றிலையும் ஒரே பக்கத்தில் வைத்தாலே போதும். மறுநாள் காலை எழுந்து இந்த வெற்றிலை கற்கண்டு அப்படியே பசு மாட்டிற்கு கொடுக்கலாம்.
அப்படி இல்லை என்றால் வெற்றிலையை பசுமாட்டுக்கு கொடுத்துவிட்டு, கற்கண்டு எறும்புகளுக்கு போடலாம். அது உங்களுடைய விருப்பம். வெள்ளிக்கிழமை இரவு நிலை வாசலில் வெற்றிலைக்கு மேல் கற்கண்டு இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி வருகை நிச்சயமாக இருக்கும்.
இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நம்பிக்கையோடு செய்தால் அடுத்த 21 நாளில் நல்ல பலனை காணலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இதே போல பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரலாம் தவறு கிடையாது. இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம் வீட்டில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், ஆரோக்கியம் இல்லாதவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், இப்படி பெரிய நல்ல விஷயங்கள் உங்களுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக நடந்துவிடும்.