விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் இந்த பூமியை கடலுக்குக் கீழே கொண்டு போய் மறைத்து வைத்த போது, இந்த பூமியை கடலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெருமாள் எடுத்த அவதாரம் தான் இந்த வராக அவதாரம். நம்மில் நிறைய பேருக்கு இந்த புராணக்கதை தெரிந்திருக்கும்.
இந்த வராக மூர்த்தி இந்த பூமியில் அவதாரம் செய்த நாள் தான் வராக ஜெயந்தி. சித்திரை மாதம் வரவிருக்கும் தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வராக மூர்த்தி பூமியில் அவதாரம் செய்ததாக சொல்லப்படுகிறது நம்முடைய புராணங்கள். நாளைய தினம் 18-4-2025 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து இந்த வராக ஜெயந்தி திதி வந்திருக்கிறது.
இந்த நாளில் வராகரை வழிபாடு செய்தால் நமக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்க வேண்டும் என்றால், நாளைய தினம் பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். பெருமாள் வழிபாட்டில் குறிப்பாக இந்த வராக மூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும்.
உங்களுடைய வீட்டின் அருகிலேயே இந்த வராக மூர்த்தி அவதாரத்தோடு ஏதேனும் சன்னிதானம் இருந்தால் அந்த இடத்திற்குச் சென்று வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பெரும்பாலான இடங்களில் இந்த வராக மூர்த்தியை எளிதில் காண முடியாது.
குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இவருக்கான சன்னிதானங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வராக மூர்த்தி இருக்கும் ஆலயங்களுக்கு தேடிச் செல்ல முடியாது என்பவர்கள் என்ன செய்வது. வீட்டிலேயே பெருமாளது திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்.
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால் அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். சொந்தமாக உங்களுக்கு நிலம் வேண்டும் என்றாலும் நீங்கள் வராக மூர்த்தியை வேண்டி கேட்கலாம். ஏனென்றால் இந்த நிலத்திற்கு சொந்தக்காரர் வராக மூர்த்தி.
இந்த பூமியை காப்பாற்றி கொண்டு வந்து சூரிய குடும்பத்தோடு சேர்த்தவர் இந்த வராக மூர்த்தி. இவரிடம் வேண்டுதல் வைத்தால் நிச்சயமாக நிலம் வாங்கும் யோகம் நமக்கு கிடைக்கும்.
- கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து – பலர் காயம்
- இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
- ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
- தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
- கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி!