சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளுக்கு புயலுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவே பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெர்ன் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
இன்று மழை தீவிரமாகும் என்றும் சில இடங்களில் ஆபத்தான அளவிற்கு வெள்ளம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் தயாராக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு நிலச்சரிவினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 13 பேர் பலியான Gondoவில் அதிகபட்ச ஆபத்து நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.