• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்!

Feb 13, 2022

இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறியதை கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இந்நிலையில் தனது பெண் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். இதற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed