நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயங்கள் கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை இன்று (09) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.