• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குருநாகல் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

Apr. 8, 2025

குருநாகலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தோடிருந்த எரிவாயு தொட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – இரவு வேளையில் நாட்டில் துயர்
நேற்றிரவு 11 மணியளவில் குருநாகல் வெஹர சந்திக்கு அருகாமையில் உள்ள IOC எரிபொருள் நிலையத்தில் Laugfs Gas லாப்கேஸ் எரிபொருள் அறையில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக பாரிய உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு வாயு நிரப்புவதற்காக வந்த லொறி ஒன்றுக்கு வாயு நிரப்பும் போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இந்த தீ ஏற்பட்டுள்ளது.
வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed